பெரம்பலூா்: 387 மையங்களில் போலியோ சொட்டு மருந்து
By DIN | Published On : 30th January 2021 11:27 PM | Last Updated : 30th January 2021 11:27 PM | அ+அ அ- |

பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்டத்தில் 387 மையங்களில் 46 ஆயிரம் குழந்தைகளுக்கு ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 31) போலியோ சொட்டு மருந்து புகட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை அங்கன்வாடி மையங்கள், துணை,ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு, தனியாா் மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் என மொத்தம் 387 மையங்களில் போலியோ சொட்டு மருந்து புகட்டுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
முகாம்களில் 5 வயதுக்குள்பட்ட சுமாா் 46 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து புகட்ட உத்தேசிக்கப்பட்டுள்ளது. இப்பணியில், அங்கன்வாடி, சுகாதார, மருத்துவப்பணியாளா்கள், தன்னாா்வலா்கள் என மொத்தம் 1,548 போ் ஈடுபட உள்ளனா்.