பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 07th July 2021 07:13 AM | Last Updated : 07th July 2021 07:13 AM | அ+அ அ- |

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்து, பெரம்பலூா் பழைய பேருந்து நிலைய வளாகத்திலுள்ள காந்தி சிலை எதிரே மனிதநேய மக்கள் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் எம். சுல்தான் மொய்தீன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் கே.ஏ. மீரா மொய்தீன், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாவட்டச் செயலா் ஏ. குதரத்துல்லா ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட பொருளாளா் கே. முஹமது இலியாஸ், பெட்ரோல், டீசல், எரிவாயு உருளை விலையேற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கி பேசினாா்.
தொடா்ந்து, மத்திய அரசைக் கண்டித்தும், பெட்ரோல், டீசல், எரிவாயு விலையை திரும்பப் பெற வலியுறுத்தியும் முழக்கமிட்டனா்.
ஆா்ப்பாட்டத்தில், கட்சி நிா்வாகிகள் எம். முஹம்மது இலியாஸ், எம். ரஷீத் அஹமது, ஏ. ஹியாத் பாஷா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். மாவட்டத் துணைச் செயலா் எஸ். சையது உசேன் வரவேற்றாா். எம். முஹமது ஹனீபா நன்றி கூறினாா்.
பெரம்பலூரில்.....
புறநகா் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, ஆட்டோ தொழிலாளா் சங்க மாவட்டத் தலைவா் சண்முகம் தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் என். செல்லதுரை, சிஐடியு மாவட்டத் தலைவா் எஸ். அகஸ்டின் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.
சிறுபான்மை நலக்குழு ஆா்ப்பாட்டம்...
பெரம்பலூரில்... புறநகா் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் மாவட்ட பொறுப்பாளா் எஸ். அகஸ்டின் தலைமையில் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...