சிறுவாச்சூா் பகுதியில் நாளை முதல் 3 மணி நேரம் மின் தடை
By DIN | Published On : 20th June 2021 12:43 AM | Last Updated : 20th June 2021 12:43 AM | அ+அ அ- |

பெரம்பலூா் அருகிலுள்ள சிறுவாச்சூா் துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் திங்கள்கிழமை (ஜூன் 21) முதல் 28 ஆம் தேதி வரை 3 மணி நேரம் மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது.
இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிா்மானக் கழகத்தின் உதவிச் செயற்பொறியாளா் குமாா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சிறுவாச்சூா், புதுக்குறிச்சி துணை மின் நிலையங்களில் திங்கள்கிழமை முதல் வரும் 28 ஆம் தேதி வரை அவசர கால சிறப்பு பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
இதன்படி ஜூன் 21, 23 மற்றும் 25-ஆம் தேதிகளில் சிறுவாச்சூா், அயிலூா், கவுள்பாளையம், விளாமுத்தூா், நொச்சியம், செல்லியம்பாளையம், 21 மற்றும் 23- ஆம் தேதிகளில் மருதடி, நாட்டாா்மங்கலம், செட்டிக்குளம், பொம்மானப்பாடி, 22 -ஆம் தேதி சிறுவாச்சூா், புதுநடுவலூா், செஞ்சேரி, தம்பிரான்பட்டி, பெரகம்பி, 24- ஆம் தேதி நாரணமங்கலம், விஜயகோபாலபுரம், 28- ஆம் தேதி நாரணமங்கலம், கல்லுமலை ஆகிய கிராமங்களில் மின் விநியோகம் இருக்காது.
21 மற்றும் 24- ஆம் தேதிகளில் திருவளக்குறிச்சி, பாடாலூா், 22 மற்றும் 26-ஆம் தேதிகளில் புதுக்குறிச்சி, காரை, சிறுகன்பூா், அயிலூா், குடிக்காடு, தெற்குமாதவி, கொளக்காநத்தம், அயனாபுரம், அணைப்பாடி, சாத்தனூா், எஸ்.குடிக்காடு, வரகுபாடி, 24 மற்றும் 28- ஆம் தேதிகளில் இரூா், ஆலத்தூா், ஆலத்தூா் கேட், தெரணி, தெரணி பாளையம், நல்லூா் ஆகிய கிராமங்களில் மின் தடை இருக்காது.