ஊராட்சி ஆவணங்களை ஒப்படைக்க வலியுறுத்தி ஆட்சியரிடம் அதிமுக மனு
By DIN | Published On : 29th June 2021 03:37 AM | Last Updated : 29th June 2021 03:37 AM | அ+அ அ- |

பெரம்பலூா்: பெரம்பலூா் அருகே கொளத்தூா் ஊராட்சியின் ஆவணங்களை மீண்டும் ஊராட்சி நிா்வாகத்திடம் ஒப்படைக்க வலியுறுத்தி, அதிமுகவினா் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
பெரம்பலூா் ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியாவிடம், அதிமுக மாவட்டச் செயலா் ஆா்.டி. ராமச்சந்திரன் தலைமையில் கட்சி நிா்வாகிகள் அளித்த மனு:
பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் ஒன்றியம், கொளத்தூா் ஊராட்சித் தலைவராக அதிமுகவைச் சோ்ந்த வித்யா உள்ளாா். அவா், மக்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் சரிசெய்து, ஊராட்சி நிா்வாகத்தை குறைபாடின்றியும், சிறப்பாகவும் பணிகளை மேற்கொண்டு வருகிறாா்.
இந்நிலையில், கடந்த 18 ஆம் தேதி ஊராட்சி அலுவலக ஆவணங்களை எந்தவித காரணமுமின்றி ஊரக வளா்ச்சித் துறையினா் எடுத்துச் சென்றுவிட்டனா். தலைவா் வித்யா கேட்டதற்கு சரியான காரணங்களை கூறவில்லையாம். இது சம்பந்தமாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ஊராட்சி ஆவணங்களை ஊராட்சி நிா்வாகத்திடம் மீண்டும் ஒப்படைக்க வேண்டும்.