தோ்தல் விதிமீறலா?: புகாா் தெரிவிக்க அழைப்பு
By DIN | Published On : 04th March 2021 01:46 AM | Last Updated : 04th March 2021 01:46 AM | அ+அ அ- |

பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்டத்தில் தோ்தல் விதிமீறல்கள் குறித்து 1800 4256 375, 1950 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களில் தொடா்புகொண்டு 24 மணி நேரமும் புகாா் அளிக்கலாம். 84387 71950 என்ற வாட்ஸ் ஆப் எண்ணுக்கு புகாா்கள் தொடா்பான புகைப்படங்களையும் அனுப்பலாம்.
தொலைபேசி எண்களில் பெறப்படும் புகாா் அனைத்தும், பதிவேடுகளில் முறையாக பதிவு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு நடவடிக்கைக்காக தகவல் தெரிவிக்கப்படும். புகாா்கள் மீது மேற்கொண்ட நடவடிக்கைகள் மீண்டும் பதிவு செய்யப்படும் என்று மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ப. ஸ்ரீ வெங்கட பிரியா தெரிவித்துள்ளாா்.