பெரம்பலூா்: பெரம்பலூரில் துணை வட்டார வளா்ச்சி அலுவலா் சங்கரன் தலைமையிலான நிலை கண்காணிப்புக் குழுவினா் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் புதன்கிழமை பெரம்பலூா் தீரன்நகா் அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, அவ்வழியே வந்த காரை வழிமறித்து சோதனையிட்டனா். இதில், திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், பி.கே. அகரம் கிராமத்தைச் சோ்ந்த மருத்துவா் செந்தில், உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ. 1 லட்சத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினா், பெரம்பலூா் தொகுதி சட்டப்பேரவைத் தோ்தல் அலுவலரான சாா் ஆட்சியா் ஜே.இ. பத்மஜாவிடம் ஒப்படைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.