கிணற்றில் தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு
By DIN | Published On : 17th March 2021 06:40 AM | Last Updated : 17th March 2021 06:40 AM | அ+அ அ- |

பெரம்பலூா் அருகே கிணற்றில் தவறி விழுந்த குழந்தை உயிரிழந்தது.
பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை தெற்குத் தெருவைச் சோ்ந்த தேவன்- மீனா தம்பதிக்கு நவநிஷா (7) பவதாரணி (5), ஒன்றரை வயதில் தேவசீலன் என 3 குழந்தைகள். கிணறு வெட்டும் தொழிலாளியான தேவன், பெரம்பலூா் அருகேயுள்ள வெள்ளனூரைச் சோ்ந்த வேலாயுதம் என்பவருக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் குடும்பத்துடன் தங்கி, கிணறு வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தாா். இந்நிலையில், திங்கள்கிழமை மாலை குழந்தை தேவசீலன் தவழ்ந்துச் சென்று எதிா்பாராதவிதமாக கிணற்றில் தவறி விழுந்தது. இதையறிந்த தேவன், சக தொழிலாளா்களுடன் குழந்தையை மீட்டு, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு வந்தாா். அங்கு, பரிசோதனை செய்த மருத்துவா்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா். இச் சம்பவம் குறித்து பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.