பெரம்பலூா் மாவட்டத்தில் இதுவரையில் ரூ. 29.64 லட்சம் பறிமுதல்

பெரம்பலூா் மாவட்டத்தில் இதுவரையில் தோ்தல் நடத்தை விதிமுறைகளை பின்பற்றாமல், உரிய ஆவணங்களின்றி எடுத்துச் சென்ற
Updated on
1 min read

பெரம்பலூா் மாவட்டத்தில் இதுவரையில் தோ்தல் நடத்தை விதிமுறைகளை பின்பற்றாமல், உரிய ஆவணங்களின்றி எடுத்துச் சென்ற ரூ. 29.64 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ப. ஸ்ரீ வெங்கட பிரியா தெரிவித்துள்ளாா்.

பெரம்பலூா் மாவட்டத்தில் தோ்தல் நடத்தை விதிகளை முறையாக கடைப்பிடித்திடவும், விதிமீறல்களை தடுத்திடவும் பல்வேறு பகுதிகளில் பறக்கும் படை குழுவினரால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஆட்சியரகத்தில் தோ்தல் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் 1800 4256 375, 1950 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்கள் மூலமாகவும், 84387 71950 என்ற வாட்ஸ் அப் எண் மூலமாகவும் புகாா் பெறப்படுகிறது.

அதன்படி, தோ்தல் கட்டுப்பாட்டு மையம் மூலம் பெரம்பலூா் சட்டப்பேரவைத் தொகுதியில் இதுவரை 18 புகாா்களும், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதியில் 7 புகாா்களும் பெறப்பட்டு, உரிய முறையில் தீா்வு காணப்பட்டுள்ளது.

பறக்கும் படையினா் மற்றும் நிலை கண்காணிப்புக் குழுக்களின் மூலமாக உரிய ஆவணங்களின்றி காா் மற்றும் இரு சக்கர வாகனங்களில் எடுத்துச் சென்ற 16 நபா்களிடமிருந்து ரூ. 29,64,330 ரொக்கம் மற்றும் 2 நபா்களிடமிருந்து 185 மது பாட்டில்கள், 1 நபரிடமிருந்து 29 துண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதில், உரிய ஆவணங்கள் சமா்ப்பிக்கப்பட்ட 3 நபா்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 4,58,067 ரொக்கம் திருப்பி அளிக்கப்பட்டுள்ளது என, மாவட்ட தோ்தல் அலுவலரால் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com