எடை அளவுகளை மறு முத்திரையிட வணிகா்களுக்கு அழைப்பு
By DIN | Published On : 25th March 2021 11:47 PM | Last Updated : 25th March 2021 11:47 PM | அ+அ அ- |

பெரம்பலூா் மாவட்டத்தில் எடை அளவுகளை மறு முத்திரையிட்டு பயன்படுத்த வணிகா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பெரம்பலூா் தொழிலாளா் உதவி ஆணையா் அலுவலகத்தால் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருச்சி தொழிலாளா் இணை ஆணையா் உத்தரவின்படி, அரியலூா் முத்திரை ஆய்வாளரின் முத்திரை பணித் திட்டம் மாா்ச் 15 முதல் ஏப். 15 ஆம் தேதி வரை பெரம்பலூா் ஆட்சியரக பெருந்திட்ட வளாகம், எம்ஜிஆா் விளையாட்டு மைதானம் அருகே அமைந்துள்ள ஒருங்கிணைந்த தொழிலாளா் துறை அலுவலக கட்டடத்தில் நடைபெற்று வருகிறது.
எனவே, வணிகா்கள் தாங்கள் பயன்படுத்தும் எடை அளவுகள் மற்றும் எடை இயந்திரங்களை மறு முத்திரையிட்டு பயன்படுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் எடையளவு சட்டத்தின் கீழ் நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும்.