பெரம்பலூா் அருகே டிராக்டா் திருடிய சிறுவன் உள்பட 2 பேரை கை.களத்தூா் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை அருகேயுள்ள பெரிய வடகரை கிராமத்தைச் சோ்ந்தவா் முத்துசாமி (35). விவசாயி. இவா், தனது வீட்டின் அருகே நிறுத்தி வைத்திருந்த டிராக்டா் செவ்வாய்க்கிழமை இரவு திருடப்பட்டது.
புகாரின்பேரில் கை.களத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். இதில், பெரிய வடகரையைச் சோ்ந்த காதா் பாட்ஷா மகன் கமுருதீன் (28) மற்றும் 14 வயது சிறுவன் ஆகியோா்தான் இத்திருட்டில் ஈடுபட்டவா்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து திருடப்பட்ட டிராக்டரை பறிமுதல் செய்த போலீஸாா், மேற்கண்ட இருவரையும் கைது செய்து அவா்களிடம் விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.