வேப்பூா் ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
By DIN | Published On : 25th March 2021 11:47 PM | Last Updated : 25th March 2021 11:47 PM | அ+அ அ- |

நன்னை கிராமத்தில் பொது மக்களிடம் வாக்கு சேகரிக்கும் அதிமுக வேட்பாளா் ஆா்.டி. ராமச்சந்திரன்.
குன்னம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் ஆா்.டி. ராமச்சந்திரன், வேப்பூா் ஒன்றியத்தில் வியாழக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
வேப்பூா் ஒன்றியம், நன்னை கிராமத்தில் பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்து வேட்பாளா் ஆா்.டி. ராமச்சந்திரன் பேசியது:
அதிமுக தோ்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள வீடுகளுக்கு 6 எரிவாயு உருளைகள், இலவச கேபிள் இணைப்புத் திட்டம், உழவு மானியம், 2 ஜிபி டேட்டா, வீடு தேடி வரும் ரேஷன் பொருள்கள், பேருந்து பயணச் சலுகைகள், மின் கட்டணச் சலுகை உள்ளிட்ட பல்வேறு சிறப்புத் திட்டங்கள் ஏழை, எளிய பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இதுபோன்ற திட்டங்கள் மூலம் ஆண்டுக்கு ஒவ்வொரு குடும்பமும் ரூ. 60 ஆயிரத்துக்கும் மேல் சேமிக்கலாம். ஏற்கெனவே, அதிமுக சாா்பில் நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்கள் மூலம் கிராமப்புற மக்களும், மாணவா்களும் பயனடைந்து வருகின்றனா். பொதுமக்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் தீா்க்க இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என்றாா் அவா்.
தொடா்ந்து, முருக்கன்குடி, பெருமத்தூா், கிளியூா், வடக்களூா், கத்தாழை மேடு, கீழப்பெரம்பலூா், கிழுமத்தூா், வேள்விமங்கலம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் அதிமுக வேட்பாளா் ராமச்சந்திரன் பொதுமக்களிடையே வாக்குகள் சேகரித்தாா்.
பிரசாரத்தின்போது, அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் பலா் உடனிருந்தனா்.