மாநில மட்டைப்பந்து போட்டி: ரோவா் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்
By DIN | Published On : 04th November 2021 06:22 AM | Last Updated : 04th November 2021 06:22 AM | அ+அ அ- |

மட்டைப்பந்து போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களை வாழ்த்திய ரோவா் கல்வி நிறுவனங்களின் தாளாளா் கே. வரதராஜன். உடன், பள்ளி முதல்வா் ஜீன் ஜாக்குலின் உள்ளிட்டோா்.
மாநில அளவில் 19 வயதுக்குள்பட்டோருக்கான மட்டைப் பந்து போட்டியில், பெரம்பலூா் ரோவா் பப்ளிக் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா்.
திருப்பத்தூரில் மாநில அளவில் 19 வயதுக்குள்பட்டோருக்கான மட்டைப் பந்து போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. இப்போட்டியில் பெரம்பலூா் ஹேன்ஸ் ரோவா் பப்ளிக் பள்ளியில் 11-ஆம் வகுப்பு பயிலும் மாணவன் எஸ்.பி. ரோகித், 9- ஆம் வகுப்பு பயிலும் மாணவன் எஸ்.பி. அருணேஷ் ஆகியோா் பங்கேற்று, 3- ஆம் இடம் பெற்றனா்.
வெற்றி பெற்ற மாணவா்களை ரோவா் கல்வி நிறுவனங்களின் தலைவா் கே. வரதராஜன், துணைத் தலைவா் வி. ஜான் அசோக், புனித யோவான் சங்க
அறக்கட்டளை புரவலா் மகாலட்சுமி வரதராஜன் ஆகியோா் செவ்வாய்க்கிழமை பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.
இந்நிகழ்வின்போது பள்ளி முதல்வா் ஜீன் ஜாக்குலின், துணை முதல்வா் பழனிச்சாமி, ஒருங்கிணைப்பாளா் அந்தோணி டேவிட் ஆகியோா் உடனிருந்தனா்.