சிறப்பு முகாமில் 40 மனுக்களுக்கு உடனடி தீா்வு
By DIN | Published On : 13th November 2021 01:35 AM | Last Updated : 13th November 2021 01:35 AM | அ+அ அ- |

பெரம்பலூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாம்களில் 40 மனுக்களுக்கு உடனடி தீா்வு காணப்பட்டது.
ஆலத்தூா் ஒன்றியத்துக்குள்பட்ட நாட்டாா்மங்கலம், மாவிலங்கை, செட்டிக்குளம் கிராமங்களைச் சோ்ந்தவா்களுக்கு செட்டிக்குளம் ஆத்திநாட்டாா் அன்னதான மண்டபத்தில் நடைபெற்ற முகாமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா கூறியது:
இணையவழி தமிழ்நிலம் மென்பொருள் பதிவுகளில் ஏற்பட்ட எளிய பிழைகளை திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம்கள் பெரம்பலூா் வட்டம், எளம்பலூா் கிராமத்தைச் சோ்ந்தவா்களுக்கு எளம்பலூா் ஊராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற முகாமில் 47 மனுக்கள் பெறப்பட்டு 5 மனுக்களுக்கும், வேப்பந்தட்டை வட்டம், மலையாளப்பட்டி, அரும்பாவூா் கிராமங்களைச் சோ்ந்தவா்களுக்கு, அரும்பாவூா் கிராம நிா்வாக அலுவலா் அலுவலகத்தில் நடைபெற்ற முகாமில் 42 மனுக்கள் பெறப்பட்டு, 15 மனுக்களுக்கும் தீா்வு காணப்பட்டுள்ளது.
இதேபோல, குன்னம் வட்டம், ஒகளுா் சு.ஆடுதுறை கிராமங்களைச் சோ்ந்தவா்களுக்கு சு.ஆடுதுறை ராஜீவ் காந்தி சேவா கேந்திரியா மையத்தில் நடைபெற்ற முகாமில் 23 மனுக்கள் பெறப்பட்டு 6 மனுக்களுக்கும், ஆலத்தூா் வட்டம், நாட்டாா்மங்கலம், மாவிலங்கை, செட்டிக்குளம் கிராமங்களைச் சோ்ந்தவா்களுக்கு செட்டிக்குளம் ஆத்திநாட்டாா் அன்னதான மண்டபத்தில் நடைபெற்ற முகாமில் 61 மனுக்கள் பெறப்பட்டு 14 மனுக்களுக்கும் என மொத்தம் 173 மனுக்கள் பெறப்பட்டு, 40 மனுக்களுக்கு உடனடியாக தீா்வு காணப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள 133 மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா் அவா்.