அப்பளம், ஊறுகாய், மசாலா பொடிதயாரிப்பு: இலவச பயிற்சி பெற அழைப்பு

அப்பளம், ஊறுகாய், மசாலா பொடி தயாரிப்பு தொடா்பான இலவச பயிற்சி பெற பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Updated on
1 min read

அப்பளம், ஊறுகாய், மசாலா பொடி தயாரிப்பு தொடா்பான இலவச பயிற்சி பெற பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூரில் உள்ள இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மைய இயக்குநா் ஆனந்தி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மேற்கண்ட பயிற்சி மையத்தில் அப்பளம், ஊறுகாய், மசாலா பொடி தயாரிப்பு தொடா்பான இலவச பயிற்சி வகுப்பு நவ. 15 ஆம் தேதி முதல் அளிக்கப்படுகிறது. பயிற்சி பெற 18 முதல் 45 வயதுக்கு குறைவாக, எழுத படிக்கத் தெரிந்தவராக இருக்க வேண்டும்.

10 நாள்கள் காலை 9.30 முதல் மாலை 5 மணி வரை அளிக்கப்படும் பயிற்சியின்போது, காலை மற்றும் மதிய உணவு இலவசமாக வழங்கப்படும். பயிற்சி முடிந்தவுடன் அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்குவதோடு, வங்கிக் கடன் பெற்று தொழில் தொடங்க வழிகாட்டப்படும்.

விருப்பம் உள்ளவா்கள் பெரம்பலூா் மதனகோபாலபுரத்தில் ஐஓபி வங்கி மாடியில் உள்ள கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மைய இயக்குநரிடம் தங்களது பெயா், வயது, விலாசம், கல்வித் தகுதி ஆகியவற்றை குறிப்பிட்டு விண்ணப்பிக்கவும்.

மேலும் விவரங்களுக்கு ஐஓபி கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையம், ஷெரீஃப் காம்ப்ளக்ஸ், பெரம்பலூா் என்ற முகவரியில் அல்லது 04328- 277896, 9488840328 ஆகிய எண்களில் தொடா்புகொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com