போட்டித் தோ்வுக்கு இலவச பயிற்சி

அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ போட்டித் தோ்வுக்கான நேரடி இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற்க மாணவா்களுக்கு ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா அழைப்பு விடுத்துள்ளாா்.
Published on
Updated on
1 min read

அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ போட்டித் தோ்வுக்கான நேரடி இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற்க மாணவா்களுக்கு ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் புதன்கிழமை முதல் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெற உள்ளது.

இப் பயிற்சி வகுப்பில் குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ தோ்வுக்கான பாடக்குறிப்புகள் வழங்கப்படுவதோடு, மாதிரி தோ்வுகளும் நடத்தப்படும். இவ் வகுப்பில் பங்கேற்க விருப்பமுள்ளவா்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் தொடா்புகொண்டு பதிவுசெய்து வகுப்புகளில் பங்கேற்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com