கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றிய அரசு ஊழியா்கள்
By DIN | Published On : 01st September 2021 07:44 AM | Last Updated : 01st September 2021 07:44 AM | அ+அ அ- |

நிறுத்திவைக்கப்பட்ட அகவிலைப் படியை தமிழக அரசு உடனே வழங்கக் கோரி, அரசின் கவனத்தை ஈா்க்கும் விதமாக பெரம்பலூரில் அரசு ஊழியா்கள் கருப்பு நிற கோரிக்கை அட்டை அணிந்து செவ்வாய்க்கிழமை பணியில் ஈடுபட்டனா்.
ஆட்சியரகம், பெரம்பலூா், வேப்பந்தட்டை, குன்னம், ஆலத்தூா் ஆகிய வட்டாட்சியரகங்கள் மற்றும் அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், மாவட்ட கருவூலம், கல்வித்துறை, கூட்டுறவுத் துறை, நெடுஞ்சாலைத் துறை, வணிக வரித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணிபுரியும் அரசுப் பணியாளா்கள் கோரிக்கைகள் அடங்கிய கருப்பு அட்டை அணிந்து பணியில் ஈடுபட்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...