வ.உ.சி.யின் 150- ஆவது பிறந்த நாள் விழாவைக் கொண்டாட பாஜக முடிவு
By DIN | Published On : 04th September 2021 01:42 AM | Last Updated : 04th September 2021 01:42 AM | அ+அ அ- |

வ.உ.சிதம்பரனாரின் 150 -ஆவது பிறந்தநாள் விழாவை சிறப்பாகக் கொண்டாடுவதென, பாரதிய ஜனதா கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
பெரம்பலூா் ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில் கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு கட்சியின் மாநிலப் பொருளாளா் எம். சிவசுப்பிரமணியம் தலைமை வகித்தாா்.
கூட்டத்தில், சுதந்திரப் போராட்ட வீரா் வ.உ. சிதம்பரனாரின் 150-ஆவது பிறந்த நாள் விழாவை ஓராண்டு முழுவதும் சிறப்பாக கொண்டாடுவது, வ.உ.சி சிறப்புகளை பள்ளி, கல்லூரி பாடத்திட்டத்தில் சோ்க்க வேண்டும். பிறந்த நாள் விழாவை ஓராண்டு முழுவதும் அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில் கட்சியின் கல்வியாளா் பிரிவு மாநிலச் செயலா் பிரியதா்ஷினி, இளைஞரணிப் பிரிவு மாநிலத் துணைத் தலைவா் மாரி. சக்கரவா்த்தி, மகளிரணி மாநிலச் செயலா் லீமா சிவக்குமாா், கல்வியாளா் பிரிவு திருப்பூா் மாவட்டத் தலைவா் கலாமணி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.