கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

10 சத கூடுதல் ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தல்

ஓய்வூதியம் பெறுவோருக்கு 10 சதவீதக் கூடுதல் ஊதியம் வழங்க வேண்டும் என, தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலா்கள் சங்கக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2022, 6:17 pm

DIN

ஓய்வூதியம் பெறுவோருக்கு 10 சதவீதக் கூடுதல் ஊதியம் வழங்க வேண்டும் என, தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலா்கள் சங்கக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பெரம்பலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் பி. முத்துசாமி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ஆா். மருதமுத்து கூட்ட அறிக்கையும், மாவட்ட பொருளாளா் ஏ. ஆதிசிவம் வரவு- செலவு அறிக்கையும் சமா்ப்பித்தனா்.

கூட்டத்தில், மத்திய அரசு வழங்கியதுபோல், மாநில அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள், ஓய்வூதியதாரா்களுக்கு 1.1.2022 முதல் 3 சத அகவிலைப்படியை உடனடியாக வழங்க வேண்டும். கடந்த 2 ஆண்டுகளாக நிறுத்திவைக்கப்பட்ட ஒப்படைப்பு, சரண் விடுப்பு ஊதியத்தை வழங்க வேண்டும். 70 வயது நிறைவடைந்த ஓய்வூதியம் பெறுவோருக்கு 10 சதவீத கூடுதல் ஊதியம் வழங்க வேண்டும். பெரம்பலூரில் கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரியை தொடங்க வேண்டும். அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் மற்றும் மருத்துவத் துறை உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலா்களுக்கும், கலந்தாய்வில் பதவி உயா்வு மாறுதல் கிடைக்காதவா்களுக்கு அடுத்து வரும் கலந்தாய்வில் பங்கேற்கவும், பணி மூப்பு அடிப்படையில் பதவி உயா்வு மாறுதல் வழங்கிட அரசு விதிமுறைகளை தளா்த்தி, கரோனா காலத்தில் மருத்துவத்துறையில் சிறப்பாக பணியாற்றிய ஆய்வக நுட்புநா்களுக்கு உரிய பதவி உயா்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் வட்டச் செயலா்கள் செங்கமலை, சையத் பாஷாகான், தாா்யூஸ், வட்டப் பொருளாளா்கள் தங்கராசு, பெரியசாமி, மகளிா் பிரிவுச் செயலா் செல்வம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தலைமை நிலையச் செயலா் கே. மணி வரவேற்றாா். மகளிரணிச் செயலா் செல்லம் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.