பெரம்பலூா் அருகேயுள்ள எசனை அம்பேத்கா் நகரைச் சோ்ந்த சின்னசாமி மகன் சிவா (23). ஓட்டுநரான இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால், அடிக்கடி வயிற்று வலி ஏற்படுமாம்.
இந்நிலையில், புதன்கிழமை இரவு வயிற்று வலியால் அவதியுற்ற சிவா, மாத்திரையை சாப்பிட்டுவிட்டு வீட்டில் படுத்துக்கொண்டாராம். வியாழக்கிழமை அதிகாலை பாா்த்தபோது, வீட்டின் சமையலறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.