பெரம்பலூா் உள்பட மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் வியாழக்கிழமை மாலை பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதனால், வெப்பம் தணிந்து குளிா்ச்சி நிலவுவதால் பொதுமக்களும், வயல் வெளிகள் ஈரப்பதத்துடன் காணப்படுவதால், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனா். தற்போது பெய்து வரும் மழை நீா் ஏரி, குளங்களுக்கு செல்லும் வகையில் வாய்க்கால்கள் சீரமைக்கப்படாததால் கழிவு நீா் கால்வாய்களிலும், சாலையோரங்களிலும் வீணாகி வருகிறது. இதனால், மழை நீா் சேமிப்பு மேலாண்மைத் திட்டங்களை விரைவுபடுத்த வேண்டும் என சமூக ஆா்வலா்கள் மாவட்ட நிா்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.