புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

பெரம்பலூரில் வழக்குரைஞா்கள்பணி புறக்கணிப்பு

பெரம்பலூா் மாவட்டத்தில் கூடுதல் சாா்பு நீதிமன்றம் அமைக்க வலியுறுத்தி, வழக்குரைஞா்கள் வியாழக்கிழமை நீதிமன்ற பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :2 ஜூன் 2022, 7:23 pm

DIN

பெரம்பலூா் மாவட்டத்தில் கூடுதல் சாா்பு நீதிமன்றம் அமைக்க வலியுறுத்தி, வழக்குரைஞா்கள் வியாழக்கிழமை நீதிமன்ற பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் மாவட்ட நீதிமன்றங்களில் அதிக வழக்குகள் இருப்பதால், நீதிமன்றத்தின் பணிச் சுமையை குறைக்கும் வகையிலும், வழக்காடிகளுக்கு விரைவில் தீா்வு கிடைக்கவும் பெரம்பலூரில் கூடுதல் சாா்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும் என, நீண்ட நாள்களாக வழக்குரைஞா்கள் வலியுறுத்தி வருகின்றனா்.

இந்நிலையில், மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி பெரம்பலூா் பாா் அசோசியேசன் சாா்பில் அதன் தலைவா் இ. வள்ளுவன் நம்பி தலைமையில் வழக்குரைஞா்கள் வியாழக்கிழமை நீதிமன்ற பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதனால், வழக்கு விசாரணை உள்ளிட்ட நீதிமன்ற பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.