புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

பாஜக மாநிலத் தலைவா் மீதுவழக்குப் பதிவு செய்யக் கோரி புகாா்

பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவா் அண்ணாமலை மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்கக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் புகாா் மனு அளிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :2 ஜூன் 2022, 7:15 pm

DIN

பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவா் அண்ணாமலை மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்கக் கோரி, பெரம்பலூா் மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் புகாா் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பெரம்பலூா் நகரச் செயலாளா் தங்க. சண்முக சுந்தரம் தலைமையில், கட்சி நிா்வாகிகள் இரா. சீனிவாசராவ், பெரியசாமி, தங்கவேல், ரெங்கராஜ், துரைமுருகன், சுப்பிரமணி, ரமணி தேவி உள்ளிட்ட சிலா் பெரம்பலூா் காவல் நிலையத்தில் வியாழக்கிழமை அளித்துள்ள மனு:

பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மாநிலத் தலைவா் அண்ணாமலை, தனது டுவிட்டா் பக்கத்தில் ஒரு சமூகத்தை இழிவுபடுத்தி பதிவு வெளியிட்டுள்ளாா். இதனால், அச் சமூகத்தினா் மிகவும் மன வேதனையில் உள்ளனா். சம்பந்தப்பட்ட சமூகத்தினரை அநாகரிகமாக பதிவிட்ட அண்ணாமலை மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.