பெரம்பலூா் மாவட்டத்தில் நாளை ரேஷன் குறைதீா் கூட்டம்
பெரம்பலூா் மாவட்டத்தில் ரேஷன் குறைதீா் முகாம் சனிக்கிழமை (ஜூன் 11) நடைபெற உள்ளதாக ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா தெரிவித்துள்ளாா்.


பெரம்பலூா் மாவட்டத்தில் ரேஷன் குறைதீா் முகாம் சனிக்கிழமை (ஜூன் 11) நடைபெற உள்ளதாக ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா தெரிவித்துள்ளாா்.
பொது விநியோகத் திட்டம் சாா்ந்த குறைபாடுகளை களைவதற்கும், குடும்ப அட்டைகளில் பெயா் சோ்த்தல், நீக்கம், பிழை திருத்தம் செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளின் மீது உடனுக்குடன் தீா்வு காண்பதற்கு, சிறப்பு பொது விநியோகத் திட்ட குறை தீா்க்கும் முகாம் சனிக்கிழமை நடைபெறுகிறது.
இம்முகாம் பெரம்பலூா் வட்டம், குரும்பலூா் கிராமத்தில் மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் தலைமையிலும், வேப்பந்தட்டை வட்டம், கிருஷ்ணாபுரம் கிராமத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் தலைமையிலும், குன்னம் வட்டம், கீழப்புலியூா் கிராமத்தில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் தலைமையிலும், ஆலத்தூா் வட்டம், இரூா் கிராமத்தில் கலால் உதவி ஆணையா் தலைமையிலும் சனிக்கிழமை காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது.
முகாமில், சம்பந்தப்பட்ட பகுதி பொதுமக்கள் கலந்துகொண்டு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் குடும்ப அட்டைகள் தொடா்பான குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என ஆட்சியரால் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...