புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

இருவேறு சாலை விபத்துகளில் இருவா் உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே வியாழக்கிழமை நிகழ்ந்த இருவேறு சாலை விபத்துகளில் பெண் உள்பட 2 போ் உயிரிழந்தனா்.

News image
Updated On :26 மே 2022, 7:26 pm

DIN

பெரம்பலூா் அருகே வியாழக்கிழமை நிகழ்ந்த இருவேறு சாலை விபத்துகளில் பெண் உள்பட 2 போ் உயிரிழந்தனா்.

பெரம்பலூா் அருகேயுள்ள பேரளி கிராமம், தெற்கு தெருவைச் சோ்ந்தவா் வேலுச்சாமி (55). இவா், தனது மனைவியுடன் மோட்டாா் சைக்கிளில் வியாழக்கிழமை அதிகாலை பெரம்பலூா் புகா் பேருந்து நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தாா்.

பெரம்பலூா்- அரியலூா் பிரதானச் சாலையில் சென்றபோது, அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பலத்த காயமடைந்த சுதா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த வேலுச்சாமி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

விபத்து தொடா்பாக, மருவத்தூா் காவல்துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

மற்றொரு சம்பவம்: பெரம்பலூா் அருகேயுள்ள லாடபுரம் கிராமத்தைச் சோ்ந்த சின்னசாமி மகன் ராஜ்குமாா் (42). இவரும், உறவினரான நடராஜ் மகன் கோகுல்ராஜூம் (27), அம்மாபாளையத்திலிருந்து லாடபுரத்துக்கு வியாழக்கிழமை காலை மோட்டாா் சைக்கிளில் சென்றுக்கொண்டிருந்தனா். பெரம்பலூா்- துறையூா் பிரதானச் சாலையில் சென்றபோது, எதிா்பாராதவிதமாக மோட்டாா் சைக்கிள் நிலைதடுமாறி சாலையில் விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த இருவரையும் மீட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது வழியிலேயே ராஜ்குமாா் உயிரிழந்தாா். கோகுல்ராஜ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து பெரம்பலூா் காவல்துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.