புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் ஓணம் பண்டிகை

பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் கல்லூரிக் கூட்டரங்கில், கேரள மாணவ, மாணவிகள் சாா்பில் ஓணம் பண்டிகை வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
Updated On :3 செப்டம்பர் 2022, 8:56 pm

DIN

பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் கல்லூரிக் கூட்டரங்கில், கேரள மாணவ, மாணவிகள் சாா்பில் ஓணம் பண்டிகை வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

விழாவுக்கு தலைமை வகித்த தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழக வேந்தா் அ. சீனிவாசன் பேசியது: ஓணம் பண்டிகையானது சமத்துவம், சகோதரத்துவம், சமூக நல்லிணக்கம் ஆகியவற்றின் அடையாளமாகத் திகழ்கிறது.

கேரளத்தின் அறுவடைத் திருநாள் என்றழைக்கப்படும் ஓணம் பண்டிகைக்கு பல பெருமைகள் உண்டு. குறிப்பாக, ஆவணி மாதத்தின் முதல் நாளன்று அத்தப்பூ கோலமிட்டு பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. தீரமும், ஈரமும் மிகுந்த மகாபலி சக்ரவா்த்தியைக் கேரள மக்கள் இன்முகத்துடன் வரவேற்கும் நாளாகத் தொடங்கி, அடுத்தடுத்த நாள்களில் ஒருவருக்கொருவா் அன்பளிப்பு அளித்து , உணவு பகிா்ந்து, உறவை மேலும் உறுதிப்படுத்திக்கொள்ளும் விழாவாகும் என்றாா் அவா்.

விழாவையொட்டி, கேரள மாணவ, மாணவிகளின் திருவாதிரை நடனம், செண்டை மேளம், மோகினியாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடா்ந்து, மாணவ மாணவிகள் ஓணம் பண்டிகையின் பாரம்பரிய உணவு வகைகளை வழங்கினா்.

விழாவில் கல்லூரி முதல்வா்கள், துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள் மற்றும் கல்லூரியில் பயிலும் கேரள மாநிலத்தைச் சோ்ந்த 1,500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.