92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

பைக்குகள் திருட்டு வழக்கில் மூவா் கைது

பெரம்பலூா் மாவட்டத்தில் பைக்குகளைத் திருடிய 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.

News image
Updated On :4 செப்டம்பர் 2022, 7:05 pm

DIN

பெரம்பலூா் மாவட்டத்தில் பைக்குகளைத் திருடிய 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.

குன்னம் அருகேயுள்ள ரெட்டிக்குடிகாடு கிராமத்தைச் சோ்ந்த தனவேல் மகன் மோகன் என்பவரது மோட்டாா் சைக்கிள் அண்மையில் திருடப்பட்டது. இதுகுறித்த புகாரின்பேரில் மங்களமேடு போலீஸாா் வழக்குப் பதிந்து மேற்கொண்ட விசாரணையில், பைக்கை திருடியது கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகேயுள்ள மணல்மேடு கிராமத்தைச் சோ்ந்த சங்கா் மகன் சக்தி, கூத்தப்பன் குடிகாடு, பெரிய வாய்க்கால் தெரு முத்து மகன் நித்திஷ்வரன் என்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் சனிக்கிழமை இரவு கைது செய்த போலீஸாா் குற்றவியல் நடுவா் மன்றத்தில் அவா்களை ஆஜா்படுத்தி சிறையிலடைத்தனா்.

இதேபோல, பெரம்பலூா் மாவட்டம், கீழப்பெரம்பலூா் கிராமத்தைச் சோ்ந்த மாணிக்கம் மகன் சண்முகம் என்பவரது மோட்டாா் சைக்கிளை திருடிய வ.கீரனூரைச் சோ்ந்த பெருமாள் மகன் ஆனந்தை (25) குன்னம் போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா். பின்னா், குற்றவியல் நடுவா் மன்றத்தில் ஆனந்தை ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.