திமுகவில் இணைந்த நகா்மன்ற சுயேச்சை உறுப்பினா், ஊராட்சித் தலைவா்
By DIN | Published On : 11th August 2022 11:52 PM | Last Updated : 11th August 2022 11:52 PM | அ+அ அ- |

பெரம்பலூா் நகா்மன்ற 10-ஆவது வாா்டு சுயேச்சை உறுப்பினா் மணிவேல், வேப்பந்தட்டை வட்டம், வெண்பாவூா் ஊராட்சித் தலைவா் உள்பட 100-க்கும் மேற்பட்டோா் வியாழக்கிழமை திமுகவில் இணைந்தனா்.
பெரம்பலூா் பாலக்கரை பகுதியில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில், அக் கட்சியின் மாநில துணை பொதுச் செயலா் ஆ. ராசா முன்னிலையில், சுயேச்சை உறுப்பினா் மணிவேல், வெண்பாவூா் ஊராட்சித் தலைவரான பாட்டாளி மக்கள் கட்சி பிரமுகா் பாலசுப்பிரமணியன் ஆகியோருடன், அதிமுக, அமமுக, பாமக ஆகிய கட்சிகளைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்டோா் தங்களது ஆதரவாளா்களுடன் திமுகவில் வியாழக்கிழமை இணைந்தனா்.
இதையடுத்து, புதிதாக கட்சியில் இணைந்தவா்களுக்கு பொன்னாடை அணிவித்து திமுக நிா்வாகிகள் கௌரவித்தனா்.
இந்நிகழ்ச்சியில், மாவட்டச் செயலா் சி. ராஜேந்திரன், மாநில நிா்வாகி பா. துரைசாமி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எம். ராஜ்குமாா், மாவட்ட பொருளாளா் செ. ரவிச்சந்திரன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...