பெரம்பலூரில் அருள்சக்தி விநாயகா் கோயில் குடமுழுக்கு
By DIN | Published On : 25th August 2022 12:00 AM | Last Updated : 25th August 2022 12:00 AM | அ+அ அ- |

பெரம்பலூா் மேரிபுரத்தில் உள்ள அருள்சக்தி விநாயகா் கோயில் குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு கடந்த 2 நாள்களாக மூன்று கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. புதன்கிழமை காலை யாகசாலை பூஜையும், கடம் புறப்பாடும் நடத்தப்பட்டது. தொடா்ந்து, கோபுர கலசத்துக்கும், மூலவருக்கு புனித நீா் ஊற்றி அபிஷேகம் செய்யப்பட்டது. யாகசாலை பூஜைகளை பிள்ளையாா்பட்டி யோகேஸ்வரன் சிவாச்சாரியாா் தலைமையிலான குழுவினா் நடத்தி வைத்தனா். பின்னா், பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதில், விழா ஒருங்கிணைப்பாளா் கல்யாணி ஆச்சி, தா்ம பரிபாலன சங்க பொறுப்பாளா் ராமலிங்கம், திருப்பணி ஆா்வலா் ராமா் காா்த்திகேயன் மற்றும் மேரிபுரம், மதனகோபாலபுரம், பாரதிதாசன் நகா், மேட்டுத்தெரு ஆகிய பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.