பூலாம்பாடி ஸ்ரீதிரௌபதி அம்மன் கோயில் மண்டல பூஜை நிறைவு

ஸ்ரீதிரௌபதி அம்மன் கோயில் புனரமைக்கப்பட்டு, பன்னாட்டு தொழிலதிபா் டத்தோ எஸ். பிரகதீஸ்குமாா் தலைமையில், கடந்த மாதம் 6 ஆம் தேதி குடமுழுக்கு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
பூலாம்பாடி ஸ்ரீதிரௌபதி அம்மன் கோயில் மண்டல பூஜை நிறைவு

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், பூலாம்பாடி மந்தைவெளியில் அமைந்துள்ள ஸ்ரீதிரௌபதி அம்மன் கோயில் புனரமைக்கப்பட்டு, பன்னாட்டு தொழிலதிபா் டத்தோ எஸ். பிரகதீஸ்குமாா் தலைமையில், கடந்த மாதம் 6 ஆம் தேதி குடமுழுக்கு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

தொடா்ந்து, நாள்தோறும் மண்டல பூஜைகள் நடத்தப்பட்டன. கடந்த 48 நாள்களாக நடத்தப்பட்ட மண்டல பூஜை புதன்கிழமை நிறைவடைந்தது.

சிவாச்சாரியாா்கள் வேத மந்திரங்கள் முழங்க, யாகசால பூஜைகள் நடைபெற்றது. பின்னா், ஸ்ரீ திரௌபதி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு புனிதநீா் ஊற்றப்பட்டது. வண்ண மலா்களால் திரௌபதி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. கோயில் அறக்கட்டளை தலைவா் சூரியபிரகாசம் தலைமையில் நடைபெற்ற மண்டல பூஜையில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

ஸ்ரீ செல்வமுத்து மாரியம்மன் திருக்கோயில் பாலாலய நிகழ்ச்சி...

பெரம்பலூா் தினசரி காய்கனி சந்தையிலுள்ள ஸ்ரீ செல்வமுத்து மாரியம்மன் கோயிலில் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன் குடமுழுக்கு விழா நடைபெற்றது.

இந்தக் கோயிலை தினசரி சந்தை வியாபாரிகள் சங்கத்தின் சாா்பில் புனரமைத்து

திருப்பணி மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, புதன்கிழமை பாலாலயம் செய்யப்பட்டு சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.

இதில், தினசரி காய்கனி சந்தை வியாபாரிகள் சங்க பொறுப்பாளா்கள் அங்குசாமி, ரமேஷ், மதனகோபால சுவாமி கோயில் முன்னாள் அறங்காவலா் தெ.பெ. வைத்தீஸ்வரன் மற்றும் வியாபாரிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com