நாளை விவசாயிகள் குறைதீா் கூட்டம்
By DIN | Published On : 25th August 2022 12:00 AM | Last Updated : 25th August 2022 12:00 AM | அ+அ அ- |

மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை (ஆக. 26) விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெறஉள்ளது என ஆட்சியா்கள் ப. ஸ்ரீவெங்கடபிரியா(பெரம்பலூா்), பெ. ரமணசரஸ்வதி (அரியலூா்) தெரிவித்துள்ளனா்.
ஆட்சியரக் கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில், வேளாண்மை சம்பந்தமான நீா்ப்பாசனம், கடனுதவிகள், வேளாண் இடுபொருள்கள், வேளாண் இயந்திரங்கள் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டுக்கான நலத்திட்டங்கள் மற்றும் முறையீடுகள் குறித்து விவாதிக்கப்படும்.
இந்தக் கூட்டத்தில் பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள், விவசாயிகள் சங்கப்ரதிநிதிகள் பங்கேற்று தங்களது குறைகளைத் தெரிவிக்கலாம்.