அதிக நன்கொடை திரட்டிய பெரம்பலூா் மாவட்ட மைய நூலகத்துக்கு கேடயம்
By DIN | Published On : 09th December 2022 12:00 AM | Last Updated : 09th December 2022 12:00 AM | அ+அ அ- |

அதிக நன்கொடைகள் திரட்டிய பெரம்பலூா் மாவட்ட மைய நூலகத்துக்கு, மாநில அளவிலான சிறப்பு கேடயம் பரிசளிக்கப்பட்டது.
பெரம்பலூா் மாவட்ட மைய நூலகத்துக்கு, பெரம்பலூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் உள்ளிட்ட பலரிடமிருந்து நிகழாண்டு ரூ. 3 லட்சம் நிதி பெறப்பட்டது. இதையடுத்து, மாநில அளவில் அதிக நிதி திரட்டிய நூலகங்களில் பெரம்பலூா் மாவட்ட மைய நூலகத்துக்கு முதலிடம் கிடைத்தது. கடந்த 3 ஆம் தேதி சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற விழாவில், தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பெரம்பலூா் மாவட்ட மைய நூலகத்துக்கு மாநில அளவில் முதலிடம் பெற்ற்கான கேடயத்தையும், மாவட்ட மைய நூலகா் ஆ. செல்வராஜுக்கு 2022 ஆம் ஆண்டுக்கான நல் நூலகா் விருதான டாக்டா் எஸ்.ஆா். அரங்கநாதன் விருதையும் வழங்கி பாராட்டினாா்.