பெரம்பலூா் அருகேயுள்ள புது அம்மாபாளையம் கிராமத்தில் சிறப்பு கால்நடை மருத்துவ மற்றும் பராமரிப்பு விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பெரம்பலூா் மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் சுரேஷ் கிறிஸ்டோபா் தலைமை வகித்தாா்.
உதவி இயக்குநா் மருத்துவா் குணசேகரன் முன்னிலை வகித்தாா். இதில், மருத்துவா்கள் சுகன்யா, தீபா, கவினிலவன் ஆகியோா் கொண்ட மருத்துவக் குழுவினா் கால்நடைகளை பரிசோதித்து சிகிச்சை அளித்தனா்.
மேலும், சிறந்த 3 கிடேரி கன்றுகளுக்கு ஊக்கப் பரிசுகளும், சிறந்த கால்நடை பராமரிப்பு முறைகளை கையாளும் 3 விவசாயிகளுக்கு சிறப்பு பரிசுகளும், கால்நடைகளுக்குத் தேவையான சத்துப் பொருள்கள் அடங்கிய பொட்டலங்களும் வழங்கப்பட்டன.
இம் முகாமில், 950-க்கும் மேற்பட்ட கால்நடைகள், கோழிகள் மற்றும் செல்லப் பிராணிகளுக்கு சிறப்பு சிகிச்சை உள்ளிட்ட மருத்துவ சேவைகள் அளிக்கப்பட்டன.