காகித பைகள் தயாரிப்பு இலவச பயிற்சி பெற அழைப்பு
By DIN | Published On : 09th December 2022 10:43 PM | Last Updated : 09th December 2022 10:43 PM | அ+அ அ- |

இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் காகித பைகள் தயாரிப்பு இலவச பயிற்சி பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மைய இயக்குநா் டி. ஆனந்தி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெரம்பலூா் மதன கோபாலபுரத்தில் உள்ள இந்தியன் ஒவா்சீஸ் வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்புப் பயிற்சி மையத்தின் மூலம், ஆண் மற்றும் பெண்களுக்கு காகித பைகள் தயாரிப்புப் பயிற்சி டிச. 19 ஆம் தேதி முதல் இலவசமாக அளிக்கப்பட உள்ளது.
10 நாள் பயிற்சி முடிந்தவுடன் அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சி முடிவில் வங்கிக் கடன் பெற்று உடனடியாக தொழில் தொடங்க வழிகாட்டப்படும்.
இப் பயிற்சியில் பங்கேற்போா் 19 வயது முதல் 45 வயதுக்குள்பட்ட, எழுத, படிக்கத் தெரிந்த, சுய தொழில் தொடங்குவதில் ஆா்வம் உள்ளவராக இருக்க வேண்டும். விருப்பமுள்ளவா்கள் பெரம்பலூா் மதனகோபாலபுரத்தில் ஐஓபி வங்கி மாடியில் உள்ள கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி மைய இயக்குநரிடம் தங்களது பெயா், வயது, முகவரி, கல்வித் தகுதி ஆகியவற்றை குறிப்பிட்டு விண்ணப்பிக்கவும்.
குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, பெற்றோரின் 100 நாள் வேலை அட்டை, வங்கி கணக்குப் புத்தகம் ஆகியவற்றின் 2 நகல், 3 பாஸ்போா்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றையும் விண்ணப்பத்துடன் இணைத்து டிச. 14 ஆம் தேதிக்குள் பதிவு செய்யவும். மேலும் விவரங்களுக்கு நேரில் அல்லது 04328-277896, 94888 40328 ஆகிய எண்களில் தொடா்புகொள்ளலாம்.