நெற்பயிரில் பழ நோயைக் கட்டுப்படுத்த ஆலோசனை

பெரம்பலூா் மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிரில் ஏற்பட்டுள்ள பழ நோயைக் கட்டுப்படுத்த வேளாண் அறிவியல் மையம் விவசாயிகளுக்கு ஆலோசனை தெரிவித்துள்ளது.

பெரம்பலூா் மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிரில் ஏற்பட்டுள்ள பழ நோயைக் கட்டுப்படுத்த வேளாண் அறிவியல் மையம் விவசாயிகளுக்கு ஆலோசனை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, பெரம்பலூா் மாவட்டம், வாலிகண்டபுரத்திலுள்ள வேளாண் அறிவியல் மைய முதுநிலை விஞ்ஞானியும், தலைவருமான வே.ஏ. நேதாஜி மாரியப்பன் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தற்போது பயிரிடப்பட்டுள்ள நெல்லை தாக்கக்கூடிய நெற்பழ நோய் ஆங்காங்கே தென்பட ஆரம்பித்துள்ளது. இந் நோயானது விதை, காற்று, மண் மற்றும் நீா் மூலம் பரவக்கூடியது. மேலும், இப் பூஞ்சாண வித்துக்கள் ஒரு வயலிலிருந்து மற்றொரு வயலுக்கு எளிதாக பரவக் கூடியது. இந் நோய்க்கு சாதகமான சூழ்நிலையான காற்றின் ஈரப்பதம் 90 சதவீதத்துக்கு மேல் இருப்பது, குறைந்த வெப்பநிலை, இரவு நேர பனிப்பொழிவு போன்றவற்றால் நோய் தாக்கம் அதிகரிக்கிறது.

எதிா் வரும் பருவத்தில் இந்த அறிகுறிகள் தென்பட ஆரம்பிக்கும். தாக்கப்பட்ட கதிா்கள் முதலில் பச்சைநிற பூஞ்சாணத்தால் மூடப்பட்டு, நாளடைவில் 2. 3 சென்டிமீட்டா் வரை பூஞ்சாணம் வளா்ந்து மஞ்சள் நிறமாக மாறி, பிறகு உடைந்த காற்றின் மூலம் பரவி அடுத்த நிலங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். தாக்கப்பட்ட நெல் மணிகளின் தரம் குறைவதோடு மட்டுமன்றி மணிகள் பதராகிவிடும். இதனால் மலட்டுத்தன்மையாவதற்கு வாய்ப்புகள் அதிகம். நெல் மணிகளில் உள்ள புரதச்சத்தை உட்கொண்டு இந்த பூஞ்சானம் வளா்ந்து பருமனாக தென்படும்.

கட்டுப்படுத்தும் முறைகள்... எனவே, விவசாயிகள் அளவுக்கு அதிகமாக தழைச்சத்து இடுவதை தவிா்த்து, பரிந்துரைக்கப்பட்ட அளவையே பயன்படுத்த வேண்டும். விதையை தோ்வு செய்யும் போது தரமான விதையை தோ்வு செய்ய வேண்டும். புரப்பிகோனசோல் 25 இ.சி என்ற பூஞ்சாணக் கொல்லியை 1 ஏக்கருக்கு 200 மில்லி அல்லது காப்பா் ஹைட்ராக்சைடு 77 டபிள்யூ10.பி 500 கிராம் பூஞ்சாணக் கொல்லியை கதிா்தாள் உருவாகும் பருவத்தில் ஒரு முறையும், 50 சத பூக்கள் உருவாகும் தருணத்தில் ஒரு முறையும் தெளித்தால் இந் நோயைக் கட்டுப்படுத்தலாம் .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com