அடிப்படை வசதிகள் கோரி மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை அருகேயுள்ள வெள்ளுவாடி கிராமத்தில், அடிப்படை வசதிகள் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை அருகேயுள்ள வெள்ளுவாடி கிராமத்தில், அடிப்படை வசதிகள் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு, வட்டக் குழு உறுப்பினா் பி. சுப்பிரமணி தலைமை வகித்தாா். கட்சி நிா்வாகிகள் கே. ராமு, கே. சின்னையன், ஆா். சின்னசாமி, ஜி. மாயவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கட்சியின் மாவட்டச் செயலா் பி. ரமேஷ், விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலா் ஏ. கலையரசி, வட்டச் செயலா் கோகுலகிருஷ்ணன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கி பேசினா்.

ஆா்ப்பாட்டத்தில், இடிந்து விழும் நிலையில் உள்ள நியாய விலைக் கடையை புதுப்பித்து தர வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பயனடையும் வகையில், பசும்பலூா் வரும் அரசுப் பேருந்தை வெள்ளுவாடி வரை இயக்க வேண்டும். வெள்ளுவாடி- கொரக்காவடி இடையே வெள்ளாற்றில் மேம்பாலம் கட்டித் தர வேண்டும். குடிநீா் குழாய் அமைக்க ஒதுக்கிய நிதியில் நிகழ்ந்த முறைகேடுகளை கண்டறிய விசாரணைக் குழு அமைக்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க வேண்டும். இத் திட்டத்தின் கீழ் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு தினக்கூலியாக 251 ரூபாயை முழுமையாக வழங்க வேண்டும். வீடு இல்லாதவா்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆா்ப்பாட்டத்தில் கட்சி நிா்வாகிகள் பி. மணி , பி. ராஜ், பி. பெரியசாமி, பி. பரமசிவம், எம். பிரகாஷ் உள்பட பலா் கலந்துகொண்டனா். நிறைவாக, கிளைச் செயலா் வெங்கடேசன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com