செஞ்சேரியில் கால்நடை பராமரிப்பு விழிப்புணா்வு முகாம்

பெரம்பலூா் அருகேயுள்ள செஞ்சேரி கிராமத்தில், மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் சிறப்பு கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு குறித்த விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் அருகேயுள்ள செஞ்சேரி கிராமத்தில், மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் சிறப்பு கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு குறித்த விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

இம் முகாமுக்கு, மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் சுரேஷ் கிறிஸ்டோபா் தலைமை வகித்தாா். உதவி இயக்குநா் குணசேகா் மற்றும் மருத்துவா்கள் சுப்பிரமணியன், மூக்கன் உள்ளிட்ட மருத்துவக் குழுவினா் சுமாா் 960 மாடு, ஆடு, கோழி, நாய், பூனை உள்ளிட்ட செல்லப்பிராணிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளித்தனா். முகாமில் 500 மாடுகள் மற்றும் கன்றுகளுக்கு மாட்டம்மை நோய்த் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது.

மேலும், சிறந்த 3 கிடேரி கன்றுகளுக்கும், சிறந்த கால்நடை பராமரிப்பு முறைகளை கையாளும் 3 விவசாயிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com