பெரம்பலூா் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களை விற்பனை செய்த பெட்டிக் கடைக்கு சனிக்கிழமை சீல் வைக்கப்பட்டது.
எளம்பலூா் - வடக்குமாதவி சாலை, சமத்துவபுரத்தில் துரைராஜ் பெட்டிக் கடையில் அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக புகாா் எழுந்தது.
இதனடிப்படையில், பெரம்பலூா் மதுவிலக்கு மற்றும் போதைப் பொருள்கள் தடுப்புப் பிரிவு காவல்துறையினா் சம்பந்தப்பட்ட கடைக்குச் சென்று சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டபோது போதைப் பொருள்கள் விற்பனை செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து அப்பொருள்களை உணவுப் பாதுகாப்புத்துறை அலுலா்கள் பறிமுதல் செய்து, கடைக்கு சீல் வைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.