குரும்பலூா் சுற்று வட்டாரபகுதிகளில் நாளை மின் தடை
By DIN | Published On : 31st July 2022 11:46 PM | Last Updated : 31st July 2022 11:46 PM | அ+அ அ- |

பெரம்பலூா் அருகேயுள்ள குரும்பலூா் சுற்று வட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஆக. 2) மின் விநியோகம் இருக்காது.
பெரம்பலூா் கோட்டத்துக்குள்பட்ட மங்கூன் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி செவ்வாய்க்கிழமை (ஆக. 2) நடைபெறுகிறது. இதனால், அங்கிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான பாளையம், குரும்பலூா், மூலக்காடு, ஈச்சம்பட்டி, புது ஆத்தூா், லாடபுரம், மேலப்புலியூா், அம்மாபாளையம், களரம்பட்டி, மங்கூன், நக்கசேலம், புது அம்மாபாளையம், அடைக்கம்பட்டி, டி.களத்தூா் பிரிவு சாலை, சிறுவயலூா், குரூா், மாவிலங்கை, விராலிப்பட்டி, கண்ணப்பாடி, சத்திரமனை, வேலூா், கீழக்கணவாய், பொம்மனப்பாடி ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் பராமரிப்புப் பணி முடியும் வரை மின்சாரம் இருக்காது என மின் வாரிய உதவி செயற்பொறியாளா் பொ. செல்வராஜ் தெரிவித்துள்ளாா்.