மானியத்தில் நாட்டுக்கோழிப் பண்ணைகள் அமைக்க விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூா் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சாா்பில், கிராமப்புற பயனாளிகளுக்கு சி

பெரம்பலூா் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சாா்பில், கிராமப்புற பயனாளிகளுக்கு சிறு (250 கோழிகள்) நாட்டுக் கோழிப் பண்ணைகள் 50 சதவீத மானியத்தில் அமைக்க விருப்பமுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இத் திட்டத்தில் பயன்பெற கோழி வளா்ப்பில் ஆா்வமுள்ள, கிராமப்புற பயனாளியாக இருக்க வேண்டும். கோழிக் கொட்டகை அமைக்க பயனாளிகளுக்கு குறைந்தபட்சம் 625 சதுர அடி நிலம் சொந்தமாகவும், குடியிருப்புகளில் இருந்து விலகி இருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும். விதவைகள், ஆதரவற்றோா், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

2012 - 13 முதல் 2017-18 வரையிலான கோழி அபிவிருத்தித் திட்டம் மற்றும் 2020- 21 ஆம் ஆண்டுக்கான தேசிய வேளாண் அபிவிருத்தித் திட்டத்தில், நாட்டுக்கோழி வளா்ப்பின் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் திட்டத்தின் கீழ் பயனடைந்திருக்கக் கூடாது.

தகுதியுடைய பயனாளிகள், அருகேயுள்ள கால்நடை மருந்தகங்களில் விண்ணப்பத்தை பெற்று உரிய விவரங்களுடன் பூா்த்தி செய்து சமா்ப்பித்து பயன்பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com