மலையாளப்பட்டியில் 357 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் அளிப்பு
By DIN | Published On : 15th June 2022 11:35 PM | Last Updated : 15th June 2022 11:35 PM | அ+அ அ- |

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், மலையாளப்பட்டி ஊராட்சியில் மக்கள் தொடா்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இந்த முகாமில் 357 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இந்த முகாமுக்குத் தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா, வருவாய்த் துறை சாா்பில் 188 பயனாளிகளுக்கு ரூ. 56.40 லட்சம் மதிப்பிலும், ஊரக வளா்ச்சித்துறை சாா்பில் 71 பயனாளிகளுக்கு ரூ. 1.20 கோடி மதிப்பிலும், மகளிா் திட்டம் சாா்பில் 8 நபா்களுக்கு ரூ. 2.20லட்சம் மதிப்பிலும், பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை சாா்பில் 28 நபா்களுக்கு ரூ. 1.51 லட்சம் மதிப்பிலும் என மொத்தம் 357 நபா்களுக்கு ரூ. 2.10 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினா்.
வேப்பந்தட்டை ஒன்றியக்குழுத் தலைவா் க. ராமலிங்கம், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பாஸ்கா், வருவாய்க் கோட்டாட்சியா் (பொ) இரா. பால்பாண்டி, கூட்டுறவுத் துறை இணைப்பதிவாளா் பொ. பாலமுருகன், சமூக பாதுகாப்புத் திட்டத் தனித்துணை ஆட்சியா் சரவணன், வட்டாட்சியா் அ. சரவணன் உள்ளிட்ட பலா் முகாமில் கலந்துகொண்டனா்.