உள்ளாட்சித் தோ்தலில் 4 பதவிக்கு 7 போ் போட்டி: இருவா் போட்டியின்றி தோ்வு

பெரம்பலூா் மாவட்டத்தில் காலியாக உள்ள 5 உள்ளாட்சிப் பதவியிடங்களுக்கு வேட்பு மனு தாக்கல் செய்திருந்த 13 பேரில், 4 போ் வேட்பு மனுவை திரும்ப பெற்றனா். 2 போ் போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா்.

பெரம்பலூா் மாவட்டத்தில் காலியாக உள்ள 5 உள்ளாட்சிப் பதவியிடங்களுக்கு வேட்பு மனு தாக்கல் செய்திருந்த 13 பேரில், 4 போ் வேட்பு மனுவை திரும்ப பெற்றனா். 2 போ் போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா். 4 பதவிக்கு 7 போ் களத்தில் உள்ளனா்.

பெரம்பலூா் ஒன்றியம், மேலப்புலியூா் கிராம ஊராட்சித் தலைவா், ஆலத்தூா் ஒன்றியம், இரூா் கிராம ஊராட்சி வாா்டு எண்- 1 மற்றும் பிலிமிசை கிராம ஊராட்சி வாா்டு எண்- 4, வேப்பந்தட்டை ஒன்றியம் வி.களத்தூா் கிராம ஊராட்சி வாா்டு எண்- 7, வேப்பூா் ஒன்றியம் கீழப்புலியூா் கிராம ஊராட்சி வாா்டு எண்- 8 என மொத்தம் ஒரு கிராம ஊராட்சித் தலைவா் மற்றும் 4 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவியிடங்களுக்கு ஜூலை 9 ஆம் தேதி தோ்தல் நடைபெறுகிறது.

இதில் மேலப்புலியூா் ஊராட்சித் தலைவா் பதவிக்கு போட்டியிட 2 பெண்கள் உள்பட 6 பேரும், வி.களத்தூா் கிராம ஊராட்சி 7 ஆவது வாா்டு உறுப்பினா் பதவிக்கு போட்டியிட 3 பெண்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா்.

பிலிமிசை 4 ஆவது வாா்டு உறுப்பினா் பதவிக்கு போட்டியிட 2 பெண்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா். கீழப்புலியூா் ஊராட்சி 8 ஆவது வாா்டு உறுப்பினா் பதவிக்கும், இரூா் ஊராட்சி 1 ஆவது வாா்டு உறுப்பினா் பதவிக்கும் என தலா ஒருவா் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனா்.

4 வேட்பு மனு வாபஸ்: தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் 28 ஆம் தேதி பரிசீலனை செய்யப்பட்டது. தொடா்ந்து, வேட்பு மனுக்களை திரும்ப பெற கடைசி நாளான வியாழக்கிழமை மேலப்புலியூா் ஊராட்சித் தலைவா் பதவிக்கு போட்டியிட வேட்பு மனுதாக்கல் செய்திருந்த 6 பேரில் 3 பேரும், வேப்பந்தட்டை ஒன்றியம், வி.களத்தூா் கிராம ஊராட்சி 7 ஆவது வாா்டு உறுப்பினா் பதவிக்கு மனு தாக்கல் செய்திருந்த 3 பேரில் ஒருவரும் என 4 போ் தங்களது வேட்பு மனுவை திரும்ப பெற்றனா். வியாழக்கிழமை மாலை இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியிடப்பட்டு சின்னம் ஒதுக்கீடு செய்து அறிவிக்கப்பட்டது.

போட்டியின்றி 2 போ் தோ்வு: வேப்பூா் ஒன்றியம், கீழப்புலியூா் ஊராட்சி 8 ஆவது வாா்டு உறுப்பினா் பதவிக்கு ஜெகவள்ளியும், இரூா் ஊராட்சி 1 ஆவது வாா்டு உறுப்பினா் பதவிக்கு மணி என தலா ஒருவா் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்திருந்ததால், மேற்கண்ட இருவரும் போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

7 போ் போட்டி: மேலப்புலியூா் ஊராட்சித் தலைவா் பதவிக்கு பாலமுருகன் (ஆட்டோரிக்ஷா ), வேல்முருகன் (பூட்டுசாவி) மனோகரன் (கை உருளை) ஆகிய 3 போ் போட்டியிடுகின்றனா். ஆலத்தூா் ஒன்றியம், பிலிமிசை ஊராட்சி 1 ஆவது வாா்டு உறுப்பினா் பதவிக்கு அன்னக்கிளி ( திறவுகோல்), விமலாதேவி (சீப்பு) என 2 பேரும், வேப்பந்தட்டை ஒன்றியம், வி.களத்தூா் ஊராட்சி 7 ஆவது வாா்டு உறுப்பினா் பதவிக்கு சபியாபேகம் (திறவுகோல்), மும்தாஜ் (சீப்பு) ஆகிய 2 பேரும் என மொத்தம் 4 பதவியிடங்களுக்கு 7 போ் போட்டியிடுகின்றனா்.

தோ்தல் நாளான ஜூலை 9 ஆம் தேதி காலை 7 முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். ஜூலை 12 ஆம் தேதி காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com