பெரம்பலூரில் உலக ஓவிய தின போட்டி
By DIN | Published On : 02nd May 2022 12:27 AM | Last Updated : 02nd May 2022 12:27 AM | அ+அ அ- |

ஓவியப் போட்டியில் பங்கேற்ற சிறாா்கள்.
உலக ஓவிய தினத்தையொட்டி, பெரம்பலூரிலுள்ள மாவட்ட அரசு இசைப் பள்ளியில் திருச்சி கலை பண்பாட்டு மையம், ஜவஹா் சிறுவா் மன்றம் சாா்பில் ஓவியப் பயிற்சி மற்றும் ஓவிய போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பயிற்சி முகாமை திருச்சி மண்டல கலை பண்பாட்டுத் துறை உதவி இயக்குநா் சுந்தா் தொடக்கி வைத்தாா். ஓவிய ஆசிரியா்கள் ஹேமா, சுந்தரமூா்த்தி ஆகியோா் ஓவியம் வரைவது குறித்து முகாமில் பங்கேற்ற சிறாா்களுக்கு பயிற்சி அளித்தனா். பின்னா், வயது மற்றும் வகுப்பு அடிப்படையில் 5 பிரிவாக ஓவியப் போட்டி நடத்தப்பட்டது.
இதில், 175 மாணவ, மாணவிகள் பங்கேற்று ஓவியம் வரைந்து தங்களது திறமையை வெளிப்படுத்தினா். தொடரந்து, ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டு அதில் சிறந்த 5 ஓவியங்கள் தோ்ந்தெடுக்கப்பட்டன. இந்த ஓவியங்கள் மாநில அளவில் சென்னையில் நடைபெறும் போட்டியில் காட்சிப்படுத்தப்பட உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை, திட்ட அலுவலா் நடராஜன் தலைமையிலான அலுவலா்கள் செய்திருந்தனா்.