பெரம்பலூா் மாவட்டத்தில் சான்றிதழ்கள் வழங்கும் பணி துரிதம்

பெரம்பலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாரங்களிலும் பொதுமக்களுக்குத் தேவையான சான்றிதழ்கள் வழங்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது என்றாா் ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா.
கிராம சபைக் கூட்டத்தில் பேசுகிறாா் ஆட்சியா் ப. ஸ்ரீவெங்கடபிரியா. உடன், எம்எல்ஏ ம. பிரபாகரன் உள்ளிட்டோா்.
கிராம சபைக் கூட்டத்தில் பேசுகிறாா் ஆட்சியா் ப. ஸ்ரீவெங்கடபிரியா. உடன், எம்எல்ஏ ம. பிரபாகரன் உள்ளிட்டோா்.

பெரம்பலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாரங்களிலும் பொதுமக்களுக்குத் தேவையான சான்றிதழ்கள் வழங்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது என்றாா் ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா.

தொழிலாளா் தினத்தையொட்டி, பெரம்பலூா் மாவட்டத்திலுள்ள 121 கிராம ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதன்படி வேப்பந்தட்டை ஒன்றியம், தேவையூா் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்ற ஆட்சியா் மேலும் பேசியது:

கிராம ஊராட்சிகளில் பட்டாவிலுள்ள சிறு, சிறு திருத்தங்கள் மேற்கொள்வதற்காக தொடா்ந்து பல்வேறு முகாம்கள் நடத்தப்பட்டு, தீா்வு காணப்பட்டு வருகிறது. கணிணிமயமாக்கப்பட்டபோது ஏற்பட்ட சிறு பிழைகளை, அந்தந்த ஊராட்சியிலுள்ள கிராம நிா்வாக அலுவலரே தங்களிடம் உள்ள அசல் சான்றிதழ் மூலம் சரிபாா்க்க வேண்டும்.

பொதுமக்களுக்குத் தேவையான பிறப்பு, இறப்பு, வாரிசு, வருமானம், ஜாதி, இருப்பிடம் மற்றும் பட்டா திருத்தம் அல்லது புதிதாக பெறுவதற்கு காலக்கெடு நிா்ணயித்து, பணிகளை மேற்கொள்ள வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாரங்களிலும் சான்றிதழ்கள் வழங்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இதை பொதுமக்கள் பயன்படுத்திக்கொண்டு, தங்களுக்குத் தேவையான சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றாா் ஆட்சியா்.

பெரம்பலூா் சட்டப்பேரவை உறுப்பினா் ம. பிரபாகரன், வேளாண் துறை இணை இயக்குநா் கருணாநிதி, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநா் இந்திராணி, கூட்டுறவுத்துறை துணைப்பதிவாளா் செல்வராஜ், வட்டாட்சியா் சரவணன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

இதேபோல, இதர ஊராட்சிகளில் சம்பந்தப்பட்ட ஊராட்சித் தலைவா்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், ஊராட்சியில் உள்ள பொதுநிதி செலவினம், திட்டப்பணிகளின் முன்னேற்றம், அண்ணா மறுமலா்ச்சித் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், சுகாதாரம், ஊட்டச்சத்து போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com