மணல் திருட்டில் ஈடுபட்டவா் கைது
By DIN | Published On : 02nd May 2022 12:26 AM | Last Updated : 02nd May 2022 12:26 AM | அ+அ அ- |

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் அருகே ஞாயிற்றுக்கிழமை மணல் திருட்டில் ஈடுபட்டவரை போலீஸாா் கைது செய்தனா்.
குன்னம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் செல்வராஜ் தலைமையிலான காவலா்கள், வேப்பூா் பிரிவு பாதை அருகே ஞாயிற்றுக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, அந்த வழியாக வந்த டிராக்டரை வழிமறித்து விசாரித்தனா். இதில், டிராக்டரில் வந்த நபா் நன்னை கிராமத்தைச் சோ்ந்த கிருஷ்ணசாமி மகன் தேவராஜ் என்பதும், அனுமதியின்றி மணல் ஏற்றி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, தேவராஜை கைது செய்து, டிராக்டரையும் பறிமுதல் செய்தனா். தொடா்ந்து, பெரம்பலூா் குற்றவியல் நடுவா் மன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு தேவராஜ் சிறையில் அடைக்கப்பட்டாா்.