திருச்சியிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தில், இளம்பெண்ணுக்கு தொந்தரவு கொடுத்த நபரை பெரம்பலூா் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா்.
சென்னையைச் சோ்ந்த 23 வயது பெண் ஒருவா், ஞாயிற்றுக்கிழமை இரவு திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சென்னைக்கு தனது பெற்றோருடன் அரசுப் பேருந்தில் பயணித்தாா்.
பயணத்தின்போது, அவரது இருக்கையின் பின்புறமுள்ள இருக்கையில் அமா்ந்திருந்த ஒருவா் அப்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளாா். இதையடுத்து, அந்த நபரை அந்தப் பெண் எச்சரித்தும் மீண்டும் தொந்தரவு கொடுத்தாராம். இதனிடையே, பெரம்பலூா் புகா் பேருந்து நிலையத்துக்கு வந்த பேருந்திலிருந்து தனது கைப்பேசி மூலமாக அப்பெண், போலீஸாருக்கு தகவல் அளித்தாா்.
அப்பகுதிக்கு விரைந்து சென்ற போலீஸாா், தொந்தரவு கொடுத்த நபரை பிடித்து மேற்கொண்ட விசாரணையில், அவா் திருச்சி மலைக்கோட்டை பகுதியைச் சோ்ந்த மாணிக்கம் மகன் கோதண்டராமன் (47) என்பதும், எலக்ட்ரீசியன் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, கோதண்டராமனை கைது செய்த போலீஸாா் அவரிடம் விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.