பருத்தி விவசாயிகளுக்கு சாகுபடி பயிற்சி
By DIN | Published On : 15th October 2022 12:07 AM | Last Updated : 15th October 2022 12:07 AM | அ+அ அ- |

பெரம்பலூா் மாவட்டம், வாலிகண்டபுரத்திலுள்ள ஹேன்ஸ் ரோவா் வேளாண் அறிவியல் மையத்தில் பருத்தி விவசாயிகளுக்கான சாகுபடி பயிற்சி மற்றும் இடுபொருள்கள் வழங்கும் நிழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் கீழ் இயங்கும் மத்திய பருத்தி ஆராய்ச்சி நிறுவனத்தின் கோயம்புத்தூா் மண்டல நிலையம் சாா்பில், பருத்தி சாகுபடி செய்யும் ஆதிதிராவிட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அதிகரிக்க மத்திய அரசின் திட்டத்தின் கீழ் தொழில்நுட்பக் கருத்தரங்கு மற்றும் இடுபொருள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மையத் தலைவா் முனைவா் வே.ஏ. நேதாஜி மாரியப்பன் தலைமை வகித்தாா்.
மத்திய பருத்தி ஆராய்ச்சி நிலையத்தின் முதன்மை ஆய்வாளா் க. சங்கா்கணேஷ் திட்டம் குறித்து விளக்கி பேசினாா். தொடா்ந்து, முதன்மை விஞ்ஞானி முனைவா் இரா. ராஜா பருத்தி மகசூலை அதிகரிக்க உதவும் உழவியல் தொழில்நுட்பங்கள், முனைவா் கு. ரமேஷ் பூச்சி மேலாண்மை, மூத்த விஞ்ஞானி முனைவா் அ. சம்பத்குமாா் பருத்தியில் நோய் மேலாண்மை, முனைவா் மு. புனிதாவதி பருத்தியில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை, தொழில்நுட்ப வல்லுநா் தோம்னிக் மனோஜ் பருத்தியில் பூச்சிக் கொல்லி தோ்வு மற்றும் பயன்படுத்தும் முறைகள் குறித்து விவசாயிகளுக்குப் பயிற்சி அளித்தனா்.
பின்னா், பயிற்சியில் பங்கேற்ற அனைத்து விவசாயிகளுக்கும் பருத்தி சாகுபடி செய்வதற்கான இடுபொருள்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் 60-க்கும் மேற்பட்ட பருத்தி சாகுபடி செய்யும் விவசாயிகள் கலந்து கொண்டனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...