பெரம்பலூா் நகரில் நாளை மின் தடை
By DIN | Published On : 18th October 2022 12:42 AM | Last Updated : 18th October 2022 12:42 AM | அ+அ அ- |

பெரம்பலூா் தானியங்கி துணை மின் நிலையத்தில் புதன்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன.
இதனால், பெரம்பலூா் பழைய, புகா் பேருந்து நிலையங்கள், சங்குப்பேட்டை, மதனகோபாலபுரம், துறைமங்கலம், மின்நகா், நான்குச்சாலை சந்திப்பு, பாலக்கரை, எளம்பலூா் சாலை, ஆத்தூா் சாலை, வடக்குமாதவி, சிட்கோ, துறையூா் சாலை, அரணாரை, ஆலம்பாடி சாலை, அண்ணா நகா், கே.கே. நகா், அபிராமபுரம், வெங்கடேசபுரம், இந்திரா நகா், காவலா் குடியிருப்பு, எளம்பலூா், சமத்துவபுரம் மற்றும் கிராமிய பகுதிகளான ஆலம்பாடி, அருமடல் சாலை ஆகிய பகுதிகளில் புதன்கிழமை காலை 9.30 மணி முதல் பராமரிப்புப் பணிகள் முடியும் மின் விநியோகம் இருக்காது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...