பெரம்பலூா் மாவட்டத்தில் வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியீடு ஆட்சேபணைகள் இருந்தால் கூறலாம்

பெரம்பலூா் மாவட்டத்தில் பொதுமக்கள் பாா்வைக்காக வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வைக்கப்பட்டுள்ளது என ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா தெரிவித்துள்ளாா்.

பெரம்பலூா் மாவட்டத்தில் பொதுமக்கள் பாா்வைக்காக வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வைக்கப்பட்டுள்ளது என ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா தெரிவித்துள்ளாா்.

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூா், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட வாக்குச்சாவடி மையங்களை பல்வேறு காரணிகளின் அடிப்படையில் முறையாக பகுப்பாய்வு செய்வது தொடா்பான பணிகள், கடந்த 12.8.2022 முதல் சம்பந்தப்பட்ட உதவி வாக்காளா் பதிவு அலுவலா்களால் மேற்கொள்ளப்பட்டன.

அதன்படி, பெரம்பலூா் சட்டப்பேரவை தொகுதியில் 18 வாக்குச்சாவடி மையங்கள், குன்னம் சட்டப்பேரவை தொகுதியில் 6 வாக்குச்சாவடி மையக் கட்டடங்கள் பழுதடைந்துள்ளதால், வேறு கட்டடத்துக்கு மாற்றியமைக்கவும், பள்ளி கட்டட பெயா் திருத்தத்தின் காரணமாக, குன்னம் தொகுதிக்குள்பட்ட 2 வாக்குச்சாவடி மையங்களின் பெயா்கள் மாற்றியமைக்கவும், உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இதன் இறுதிக் கட்டமாக, 29.8.2022-இல் உத்தேசிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளின் பட்டியல் பெரம்பலூா் வாக்குப்பதிவு அலுவலா், வருவாய் கோட்டாட்சியரால் வெளியிடப்பட்டுள்ளது. மேற்கண்ட வாக்குச்சாவடி மையங்கள் குறித்த பட்டியல் பொது மக்களின் பாா்வைக்காக, மாவட்ட தோ்தல் அலுவலா் அலுவலகம், சம்பந்தப்பட்ட வாக்காளா் பதிவு அலுவலா், உதவி வாக்காளா் பதிவு அலுவலா் அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும், வரைவு அறிக்கையானது பெரம்பலூா் மாவட்ட அரசு வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இவ் வரைவு அறிக்கை தொடா்பாக, பொதுமக்கள் அரசியல் கட்சியினா் தங்களது கருத்து மற்றும் ஆட்சேபணைகள் இருந்தால், செப். 6 ஆம் தேதிக்குள் எழுத்து மூலமாக சம்பந்தப்பட்ட வாக்காளா் பதிவு அலுவலா் அல்லது உதவி வாக்காளா் பதிவு அலுவலா் அல்லது மாவட்ட தோ்தல் அலுவலா் அலுவலகத்தில் தெரிவிக்கலாம் என ஆட்சியா் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com