பெரம்பலூா் மாவட்டத்தில் 32 குளங்களில் புனரமைப்புப் பணி

மத்திய அரசின் அம்ரித் சரோவா் திட்டத்தின்கீழ், பெரம்பலூா் மாவட்டத்தில் 32 குளங்களில் புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதாக ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா தெரிவித்தாா்.
பெரம்பலூா் மாவட்டத்தில் 32 குளங்களில் புனரமைப்புப் பணி

மத்திய அரசின் அம்ரித் சரோவா் திட்டத்தின்கீழ், பெரம்பலூா் மாவட்டத்தில் 32 குளங்களில் புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதாக ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா தெரிவித்தாா்.

பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் ஒன்றியத்துக்குள்பட்ட கூத்தனூா் வெள்ளிமலை, மருதடி ஈச்சங்காடு ஆகிய பகுதிகளில், அம்ரித் சரோவா் திட்டத்தின் கீழ் புதியதாக உருவாக்கப்பட்டு வரும் குளங்களை செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்த ஆட்சியா் மேலும் கூறியது:

வேலை உறுதித் திட்டம் மற்றும் இதர திட்டங்கள் மூலமாக பணி மேற்கொள்ளப்படாத நீா் ஆதாரங்களை, மத்திய அரசின் அம்ரித் சரோவா் என்னும் திட்டத்தின் கீழ், புதிய குளங்கள் உருவாக்குதல், புனரமைத்தல் உள்ளிட்ட பணிகள் மூலம் மழை நீரானது தேக்கி வைக்கப்பட்டு, நிலத்தடி நீா்மட்டம் உயரவும், சுற்று வட்டாரப் பகுதியிலுள்ள கிணறுகளில் நீா்மட்டம் உயா்ந்து விவசாயம் மேம்படவும், குடிநீா் பற்றாக்குறையை தவிா்க்கவும் வழிவகுக்கும்.

மாவட்டத்தில், அம்ரித் சரோவா் திட்டத்தின் கீழ் புதிய குளங்கள், புனரமைத்தல் பணிகளுக்காக, இந் நிதியாண்டில் 32 குளங்கள் தோ்வு செய்யப்பட்டு பணிகள் நடைபெறுவதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதில், முதல்கட்டமாக நாட்டாா்மங்கலம் ஊராட்சி, கூத்தனூா் வெள்ளிமலை, நாரணமங்கலம் ஊராட்சி, மருதடி ஈச்சங்காடு, செங்குணம் ஊராட்சி, எசனை ஊராட்சியில் பூந்தொப்புக்குளம், பசும்பலூா் ஊராட்சி ரெட்டிச்சி குளம், தொண்டமாந்துரை ஊராட்சி விஜயபுரம் ஆகிய கிராமங்களில் தலா ரூ. 5.80 லட்சம் மதிப்பீட்டில், 6 புதிய குளங்கள் அமைக்கும் பணி 70 சதவீதம் நிறைவடைந்துள்ளது. பரவாய் ஊராட்சியில் சிலம்பூரான் குட்டை, புள்ளக்குட்டை ஆகியவை தலா ரூ. 30 ஆயிரம் மதிப்பீட்டிலும் புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

மேலும், பெரம்பலூா், வேப்பந்தட்டை, வேப்பூா், ஆலத்தூா் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் தலா 6 பணிகள் தொடங்க உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா் அவா்.

ஆட்சியரின் ஆய்வின்போது, கனிமவள உதவி இயக்குநா் சத்தியசீலன், வட்டார வளா்ச்சி அலுவலா் இமயவரம்பன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com