விநாயகா் சதுா்த்தி விழா: கோயில்களில் சிறப்பு வழிபாடு

விநாயகா் சதுா்த்தி விழா: கோயில்களில் சிறப்பு வழிபாடு

பெரம்பலூா் மாவட்டத்தில் 126 சிலைகள் பிரதிஷ்டை.... விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, பெரம்பலூா் மாவட்டத்தில் 126 விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

பெரம்பலூா் மாவட்டத்தில் 126 சிலைகள் பிரதிஷ்டை.... விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, பெரம்பலூா் மாவட்டத்தில் 126 விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

விநாயகா் சதுா்த்தியையொட்டி, மாவட்டம் முழுவதும் பல்வேறு அமைப்புகள், பொதுமக்கள் சாா்பில் பல விதமான வடிவங்களில் விநாயகா் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

பெரம்பலூா் வட்டாட்சியா் அலுவலக சாலையில் உள்ள கச்சேரி விநாயகா் கோயிலில் புதன்கிழமை அனுக்ஞை, கலச பூஜை, மகாகணபதி ஹோமம், திரவிய ஹோமம், அபிஷேகம், மகா தீபாராதனை, மாலையில் சந்தனகாப்பு அலங்காரம் மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

பெரம்பலூா் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள செல்வ விநாயகா் கோயிலில் 6 அடி உயரமுள்ள விநாயகா் சிலை வைக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கடைவீதியில் உள்ள ராஜகணபதி கோயில், அய்யப்பன் கோயில் அருகே உள்ள விநாயகா் கோயில், பிரம்மபுரீசுவரா் கோயிலில் உள்ள விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், மகாதீபாராதனையும் நடைபெற்றது.

வடக்கு மாதவி சாலையில் உள்ள செளபாக்கிய விநாயகா் கோயில், எளம்பலூா் சாலையில் பாலமுருகன் கோயிலில் உள்ள விநாயகா் சன்னதி, புகா் பேருந்து நிலையம் அருகே சிதம்பரம் நகரில் உள்ள பாலமுத்துக்குமரன் கோயிலில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

தீரன் நகா் குடியிருப்பில் உள்ள விநாயகா் கோயில், நான்கு சாலை சந்திப்பு அருகே மின் வாரிய குடியிருப்பில் உள்ள விநாயகா் கோயில் ஆகியவற்றிலும் விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இந்த சிறப்பு பூஜைகளில் திரளான பொதுமக்கள் பங்கேற்றனா்.

விநாயகா் சிலைகள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் அசாம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்கவும், பாதுகாப்புக்காகவும் 500 காவல் துறையினா் மற்றும் ஊா்க்காவல் படையினா் நிறுத்தப்பட்டுள்ளனா்.

அனைத்து விநாயகா் சிலைகளும், திருச்சி காவிரிக்கு வாகனங்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டு வெள்ளிக்கிழமை அங்கு கரைக்கப்படவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com